மதுக்கரை, அக்.26: மங்களுர்-எக்மோர் தீபாவளி சிறப்பு ரயில் போத்தனூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி போத்தனூர் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, மங்களுரில் இருந்து சென்னை-எக்மோர் வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் விடப்பட்டுள்ளது.
இந்த ரயில் வரும் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மங்களுர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, சொரனூர், பாலக்காடு வழியாக வந்து 30ம் தேதி அதிகாலை 3.18 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுர், பெரம்பூர் வழியாக சென்று இரவு 9.58 மணிக்கு எக்மோர் சென்றடையும். அன்றிரவு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் 31ம் தேதி அதிகாலை மங்களுர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
The post மங்களுர்-எக்மோர் தீபாவளி சிறப்பு ரயில் போத்தனூரில் நின்று செல்லும் appeared first on Dinakaran.