×

விவாகரத்து குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து; நடிகை சமந்தா குறித்த பேச்சை நீக்க உத்தரவு: தெலங்கானா நீதிமன்றம் அதிரடி

திருமலை: தெலங்கானா மாநில வனம் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் குறித்து பேசும்போது நடிகை சமந்தா- நாக சைத்தன்யா விவாகரத்து செய்ததற்கு கே.டி.ராமாராவ் தான் காரணம் என கூறினார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நம்பள்ளி நீதிமன்றம்,’ இதுபோன்ற கருத்துக்கள் சமூகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பதிவு, சமூக வலைதளங்கள், யூடியூப், பேஸ்புக், கூகுள் தளங்களில் அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்த கருத்துக்களை உடனே நீக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.

The post விவாகரத்து குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து; நடிகை சமந்தா குறித்த பேச்சை நீக்க உத்தரவு: தெலங்கானா நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Samantha ,Telangana court ,Tirumala ,Telangana State Forest ,Hindu Endowments ,Minister ,Konda Sureka ,KT Rama Rao ,Naga Chaitanya ,
× RELATED பல நடிகைகள் மறுத்த வேடத்தில் சமந்தா நடித்ததால் பண்ணை வீடு பரிசு