×

மாராட்டிய மாநிலம் தானே மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு

மும்பை: மாராட்டிய மாநிலம் தானே மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிரண் சந்தோஷ் பரண் என்பவர் தானே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். கிரண் சந்தோஷ் மீதான கொலை வழக்கை நீதிபதி ஆர்.ஜி.வக்மரே விசாரணைக்கு எடுத்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனது வழக்கறிஞர் வராததால் ஆத்திரம் அடைந்த கைதி கிரண் சந்தோஷ் நீதிபதி மீது காலணி வீசியுள்ளார். கைதி கிரண் வீசிய காலணி நீதிபதிக்கு முன்னால் இருந்த மரச்சட்டத்தில் மோதி கீழே விழுந்தது.

The post மாராட்டிய மாநிலம் தானே மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marathia ,MUMBAI ,Karan Santosh Paran ,Kiran Santosh ,
× RELATED மராட்டிய மகாயுதி கூட்டணி அரசில்...