தெலுங்கானா: ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டியது நடிகர்களின் பொறுப்பு என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார். ஹைதராபாத் சந்தியாதி திரையரங்கில் புஷ்பா-2 முதல் காட்சி திரையிடப்பட்ட அன்று பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திரையரங்குக்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி(35) என்ற பெண் உயிரிழந்தார், அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
திரையங்குக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றதால் தான் பெரும் நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி பெண் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நெரிசலில் பெண் உயிரிழந்ததை அடுத்து தெலுங்கானா போலீஸ் அல்லு அர்ஜுன் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது. நடிகர் அல்லு அர்ஜுன் விவகாரம் தொடர்பாக தெலுங்குத் திரையுலகினர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். ஜாமினில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், சக நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் முதல்வரை சந்தித்து பேசினர்.
The post ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டியது நடிகர்களின் பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி appeared first on Dinakaran.