×

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: அரியலூர் கலெக்டர் தகவல்

 

அரியலூர், அக். 25: அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ; 2024- ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறும் கால அவகாசம் அக்டோபர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி (ம) 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி.

விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணத் தொகை – ரூ.50, சேர்க்கை கட்டணம்: ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.185 , இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.195 . நேரடி சேர்க்கை (Spot Admission)- விண்ணப்பிக்க கடைசி நாள்-அக்டோபர் 30. மேலும் விவர ங்களுக்கு 1.அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் – 9499055877, 04329-228408 2. அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் – 9499055879 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: அரியலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur District ,Collector ,Rathanasamy ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் பெண்கள்...