கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 -க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணி இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை) -ன் படி உள்ளக குழு (Internal Committee) அமைத்திட தெரிவிக்கப்படுகிறது.
இதனைதொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவுதுறை சார்ந்த சங்கம் மற்றும் நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிகடைகள், நகைகடைகள், டிபார்ட்மெண்ட்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மேலும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களிலும் 4 நபர்கள் கொண்ட உள்ளக புகார் குழு (IC) அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெறவேண்டும். உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகளின்படி புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். உள்ளக குழு (IC) அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது ரூ.50000/- வரை அபாரதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குழு அமைத்த விபரம் மற்றும் உறுப்பினர்கள் விவரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 16.11.2024-ற்குள் அனுப்பி வைக்குமாறும், இக்குழுவின் செயல்பாடுகள் பற்றிய நிகழ்வு அறிக்கையினை ஒவ்வொரு ஆண்டும், ஆண்டறிக்கையாக அறை எண் -21, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கிருஷ்ணகிரி 635 115 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மின்னஞ்சல் dswokrishnagiri2@gmail.com மூலமாகவும் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கிருஷ்ணகிரி. 9944413189,7639375360 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
The post 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் நான்கு பேர் கொண்ட உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.