×

தீர்க்கதரிசியில் போலீஸ் வேடத்தில் ஜெய்வந்த்

சென்னை: தமிழில் திரைக்கு வந்த ‘மத்திய சென்னை காட்டுப் பய சார் இந்த காளி’ ஆகிய படங் களில் ஹீரோவாக நடித்திருந்தவர், ஜெய்வந்த். தற்போது சத்யராஜ், அஜ்மல், ஆர்.ஜி.துஷ்யந்த், மன், தேவதர்ஷினி நடிக்கும் ‘தீர்க்கதரிசி’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. பி.ஜி.மோகன், எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கியுள்ள கமர்ஷியல் கிரைம் திரில்லர் படமான இதில் நடித்தது குறித்து ஜெய்வந்த் கூறுகையில், ‘சத்யராஜ் நடித்த பல படங்களைப் பார்த்து வியந்த நான், இப்போது அவர் நடித்துள்ள படத்தில் நடித்திருப்பதை நினைத்து சந்தோஷமாகவும், மிகப்பெருமையாகவும் இருக்கிறது.

கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவர், சதீஷ் குமார். என்னு டைய சில திறமைகளைப் பார்த்து வியந்து இந்த வாய்ப்பை வழங்கி னார். இதற்கு முன்பு நான் நடித்த படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டபோது ஓடி வந்து உதவி செய்தார். ‘தீர்க்கதரிசி’ என்ற படத்தை உருவாக்கியபோது இதன் இயக்குனர்களை எனக்கு அறிமுகப்படுத்திய அவர், அற்புதமான கேரக்டரை எனக்கு வழங்கி, அதில் நான் சிறப்பாக நடித்ததாக பாராட்டினார். சென்சாரில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஒன்றில் நடக்கும் அதிரடி சம்பவங்களை முழுமையாக திரையில் சொல்லும் இந்தப் படம், அனைத்து ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்’ என்றார்.

The post தீர்க்கதரிசியில் போலீஸ் வேடத்தில் ஜெய்வந்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jaywant ,CHENNAI ,Jaywanth ,Sathyaraj ,Ajmal ,RG Dushyant ,man ,Devadarshini.… ,Jaiwant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...