×

கலந்தாய்வு கூட்டத்தில் மயங்கி உயிரிழந்த ஊராட்சி செயலாளர் குடும்பத்துக்கு நிதியுதவி

திருத்தணி: திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (58). மத்தூர் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். இவர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மதியம் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வெங்கடேசன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது சடலம் மத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இறந்த வெங்கடேசன் உடலுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், காக்கும் கரங்கள் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சார்பில் வடக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட தலைவர் சரேஷ், மாவட்ட செயலாளர் தனசேகர், மாவட்ட பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் சங்கத்தின் சார்பில் வெங்கடேசன் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினர்.

The post கலந்தாய்வு கூட்டத்தில் மயங்கி உயிரிழந்த ஊராட்சி செயலாளர் குடும்பத்துக்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Thiruthani ,Venkatesan ,Mathur ,District Rural Development Program Director ,Thiruvallur Collector ,
× RELATED பெரியபாளையம் அருகே ஊராட்சியை...