திருவள்ளூர்: திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவைகளை எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு தடம் எண் 201 என்ற அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தட பேருந்தை திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சென்னையில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா வழியாக திருப்பதி வரை செல்லும் தடம் எண் 201 புதிய பேருந்து தொடக்க விழா திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் எழில், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், ஒன்றியச் செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன் மகாலிங்கம், ரமேஷ், அரிகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் நேதாஜி, வேலாயுதம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், டி.கே.பாபு, நகர நிர்வாகிகள் கமலகண்ணன், பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், சீனிவாசன், சிவக்குமார், கொப்பூர் திலீப்குமார், சரவணன், சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்அலி, தனலட்சுமி, விஜயகுமார், மாலதி வாசன், எம்.சேகர், தினகரன், தர்மலிங்கம், அரிஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் பணிமனை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பேருந்து சென்னையிலிருந்து திருப்பதி வரை இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இன்று திருவள்ளூரில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி: சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக திருப்பதி வரை செல்லும் தடம் எண் 200 என்ற தமிழக அரசுப் பேருந்து கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி நகருக்குள், திருப்பதி செல்லும் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில், கும்மிடிப்பூண்டி நகருக்குள் வந்து செல்லும் விதமாக, நேற்று திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை (தடம் எண் 200) இயக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், நேற்று இதற்கான தொடக்க விழா நடந்தது. இதில் தமிழக அரசு போக்குவரத்துக்கழக திருவள்ளூர் மாவட்ட துணை மேலாளர் மோகன் தலைமை தாங்கினார். விழாவில் பொன்னேரி பணிமனை கிளை மேலாளர் ஜெகதீசன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் கொடி அசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.
The post திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக திருப்பதிக்கு புதிய பேருந்துகள்: எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.