×

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், அக். 19: திருவள்ளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுநாள் வரையிலும் உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும், அதை பெற்று தர நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சண்முகம், மாநில செயலாளர் துளசி நாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும், உடனடியாக இழப்பீடு பெற்று தரக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tamil Nadu Farmers' Association ,Chennai-Tirupati National Highway ,
× RELATED அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது