×

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை

டெல் அவிவ்: காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போரிட்டு வருகிறது. இந்த சூழலில், ஹமாசுக்கு எதிராக போர் நிறுத்த முயற்சிகளை மீண்டும் தொடர அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் வந்தடைந்தார். தலைநகர் டெல் அவிவ்வில் அவரது விமானம் தரையிறங்கிய போது, லெபனானில் இருந்து 5க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவப்பட்டதால் சைரன்கள் ஒலித்தன. ஆனாலும், 4 ராக்கெட்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்தது. மற்றொன்று காலி இடத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

ஹமாசுக்கு எதிரான போருக்குப் பிறகு 11வது முறையாக பிளிங்கன் இஸ்ரேல் வந்துள்ளார். இந்த பயணத்தில் காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் முயற்சிப்பது, அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பது, பாலஸ்தீன மக்களின் துன்பங்களை குறைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், பிளிங்கன் விவாதிப்பார் என அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் இணைந்து போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை appeared first on Dinakaran.

Tags : Hamas ,Gaza ,minister ,Israel ,Tel Aviv ,US ,Secretary of State ,Anthony Blingan ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை