×

பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்

பள்ளிபாளையம், ஜன.3: பள்ளிபாளையம் ராஜவீதி பாவடி தெரு செங்குந்தர் ஓம்காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 4ஆயிரம் வெற்றிலைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Omkali Amman ,Pallipalayam ,Sengundhar Omkali Amman Temple ,Pallipalayam Rajaveethi Pavadi Street ,Amman ,Pongal festival ,
× RELATED 10 மாதங்களுக்கு பிறகு துப்பு...