×

புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ₹7.90 கோடிக்கு விற்பனை

நாமக்கல், ஜன.3: நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ₹7.90கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளில் புத்தாண்டையொட்டி மதுபானங்கள் கூடுதலாக கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி கடந்த 31ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் ₹3.90 கோடிக்கும், புத்தாண்டு தினமாக கடந்த 1ம் தேதி ₹4கோடிக்கும் மதுபானங்கள் மற்றும் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு புத்தாண்டையொட்டி ₹7.90 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ₹7.90 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,New Year's Eve ,Namakkal ,Namakkal district ,Dinakaran ,
× RELATED கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்