×

அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

நாமகிரிப்பேட்டை, ஜன.1: தமிழகத்தில் பிளஸ்1 படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டது. இதில், மாநில அளவில் முதல், 500 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக, ₹1000 வழங்கப்படும். இது அந்த மாணவ, மாணவிகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை கிடைக்கும். இதற்கான திறனறி தேர்வு சில வாரங்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் நடந்தது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதன் தேர்வு முடிவுகள், சில நாட்களுக்கு முன் வெளியானது. நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரியனா பெய்த், பவித்ரா ஆகியோர் 98 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், துணை தலைவர் செந்தில், பொருளாளர் கிருஷ்ணன், விஜய்பாபு உள்ளிட்ட உறுப்பினர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

The post அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம் appeared first on Dinakaran.

Tags : Namagiripettai ,Nadu ,Chief Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற...