×

தொழிலாளி கொலையில் 50 வயது காதலி கைது

பரமத்திவேலூர், டிச.30: பரமத்திவேலூர் அருகே தொழிலாளி கொலையில் அவரது 50 வயது காதலியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கீழ்சாத்தம்பூர் பெருமாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் மனைவி வளர்மதி(50). சீரங்கன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதால், வளர்மதி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், மோகனூர் அருகே பரளி பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத கூலித்தொழிலாளி துரைசாமி(47) என்பவருடன் வளர்மதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் சேர்ந்து கணவன்- மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர். குடிப்பழக்கம் உள்ள துரைசாமி, போதையில் அடிக்கடி வளர்மதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வளர்மதி அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரமாரி தாக்கினார். இதில், படுகாயமடைந்த துரைசாமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த பரமத்தி டிஎஸ்பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். இதையடுத்து, துரைசாமி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து வளர்மதியை கைது செய்தனர். விசாரணையில், துரைசாமி குடித்து விட்டு வந்து வளர்மதிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தது தெரிய வந்தது. நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்த ஆத்திரத்தில் சரமாரி தாக்கியதில் உயிரிழந்து விட்டதாக வளர்மதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தொழிலாளி கொலையில் 50 வயது காதலி கைது appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Seerangan ,Valarmathi ,Kilsathampur Perumampalayam ,Namakkal district ,
× RELATED பொத்தனூர் பகுதியில் செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு