×

மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு திருவண்ணாமலையில் வரும் 26ம் தேதி

திருவண்ணாமலை, அக்.22: திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் கோ.கண்ணன் தலைமை தாங்குகிறார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஆர்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் மற்றும் திமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு கலந்துகொண்டு தீர்மானங்களை வழங்கி பேசுகிறார். அதில், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு திருவண்ணாமலையில் வரும் 26ம் தேதி appeared first on Dinakaran.

Tags : District DMK Executive Committee ,Minister ,AV Velu ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Thiruvannamalai District DMK Executive Committee ,Tiruvannamalai District DMK ,Tiruvannamalai North ,South District DMK ,
× RELATED திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி...