×

குடும்பத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலி கலசப்பாக்கம் அருகே லாடவரத்தை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து விபத்து

கலசப்பாக்கம், டிச.31: பெங்களூரில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்கள். இவர்கள் 3 பேரும் கலசப்பாக்கம் அருகே லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் லாடவரம் ஊராட்சி கெங்க நல்லூர் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர்கள் மாரிமுத்து(47). இவரது மனைவி முனியம்மாள்(40), மகன் அபிஷேக்(18), மகள் நந்தினி(16). இவர்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ராம் புரம் பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை 7 மணியளவில் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பரவியது.

இதில் வீட்டிலிருந்த முனியம்மாள், அபிஷேக், நந்தினி ஆகியோர் தீ காயங்களுடன் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக மாரிமுத்து பால் வாங்க கடைக்கு சென்றிருந்ததால் சிலிண்டர் விபத்திலிருந்து தப்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்கள். நேற்று காலை முனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். 3 நபர்களும் பலியான தகவல் சொந்த கிராமமான லாடவரம் கிராமத்தில் உறவினர்களுக்கும் தெரிய வந்தது. தகவலறிந்த உறவினர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று 3 பேரின் சடலங்கள் சொந்த கிராமமான லாடவரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று சடலங்கள் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சிலிண்டர் வெடித்த விபத்தில் பரிதாபமாக பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

The post குடும்பத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலி கலசப்பாக்கம் அருகே லாடவரத்தை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Ladavaram ,Kalasappakkam ,Bengaluru ,Tiruvannamalai ,
× RELATED கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின்...