- திருவண்ணாமலை மாவட்டம்
- செய்யாறு
- திருவண்ணாமலை மாவட்டம்
- ஈரோடு
- தமிழ்
- தமிழ்நாடு
- முத்தூட் தடகளப் போட்டிகள்
- ஈரோடு...
- தின மலர்
செய்யாறு, டிச. 31: ஈரோட்டில் மாநில அளவில் நடந்த மூத்தோர் தடகள போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் தங்கம் உள்பட 32 பதக்கம் வென்று சாதனை படைத்தது உள்ளனர். தமிழ்நாடு மாநில அளவில் முத்தூட் தடகள போட்டிகள் ஈரோடு வ உ சி மைதானத்தில் கடந்த 28, 29ம் தேதிகளில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் 25 ஆண்கள், 8பெண்கள் என 33 பேர் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் சங்கிலி கொண்டு எறிதலில் பாலாஜி தங்கமும், உயரம் தாண்டுதலில் அருலேசன் வெண்கலமும், 5000 மீட்டர் நடை போட்டியில் பாபு வெள்ளியும், சங்கிலி குண்டு எரிதலில் வெண்கலமும், 5000 மீட்டர் நடை போட்டியில் பன்னீர்செல்வம் வெண்கலமும், 5000 மீட்டர் நடை போட்டியில் ஜெகநாதன் வெண்கலமும், தடை தாண்டும் போட்டியில் மணிமலர் வெண்கலமும் வென்றுள்ளார். பெண்கள் பிரிவில் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் தலா ஒரு தங்கமும் ஆயிரம் மீட்டர் தடை போட்டியில் வெள்ளியும் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் சுமதி பெற்றுள்ளார். பல்வேறு போட்டியில் 5 தங்கம் 10 வெள்ளி 17 வெண்கலம் உள்பட மொத்தம் 32 பதக்கங்களை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
The post மூத்தோர் தடகள போட்டியில் 32 பதக்கம் வென்று சாதனை தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.