×
Saravana Stores

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைவு

அம்பத்தூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

குறிப்பாக, தக்காளி ரூ.150க்கும், பீன்ஸ் ரூ.250க்கும், அவரைக்காய் ரூ.100க்கும் என இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், நேற்று காலை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 700 வாகனங்களில் இருந்து 7000 ஆயிரம் டன் காய்கறிகள் வந்து குவிந்தது. வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், பீன்ஸ் ரூ.150க்கும், அவரைக்காய் ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், ஒரு கிலோ வெங்காயம், காராமணி, சேம கிழங்கு ரூ.50க்கும், சின்ன வெங்காயம், முருங்கைகாய் ரூ.60க்கும், உருளை கிழங்கு ரூ.43க்கும், கேரட் ரூ.40க்கும், பீட்ரூட், புடலங்காய், சுரக்காய் ஆகியவை ரூ.25க்கும், சவ்சவ், முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கோவைசக்காய், கொத்தவரங்காய் ஆகியவை ரூ.30க்கும், காளிபிளவர், பீர்க்கங்காய், முட்டைகோஸ் ரூ.35க்கும், சேனைக்கிழங்கு ரூ.66க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும், இஞ்சி ரூ.180க்கும், பூண்டு ரூ.350க்கும், பட்டாணி ரூ.230க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Coimbed market ,Andhra ,Karnataka ,Kerala ,Maharashtra ,Tamil Nadu ,Coimbed ,
× RELATED கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து...