×

பிறந்த நாள் பார்ட்டி வைக்க வழிபறி: அரிவாளுடன் ‘கெத்து’ காட்டி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது

திருச்சி, அக்.21: திருச்சியில் பிறந்த நாளன்று நண்பர்களுக்கு ‘சரக்கு பார்ட்டி’ வைப்பதற்காக வழிபறியில் ஈடுபட்டதுடன், பிறந்தநாள் விழாவின் போது அறிவாளுடன், ‘தீம்’ மியூசிக் பின்னணியில் ‘கெத்து’ காட்டி வீடியோ வெளியிட்ட ரவுடியை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி உறையூரை சேர்ந்தவர் சரண் என்கிற சரண்ராஜ் (32). இவர் மீது கொலை, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளது. இவர் ஒரு சரித்திரபதிவேடு குற்றவாளி. இந்நிலையில் தன் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு ‘சரக்கு பார்ட்டி’ வைப்பதற்கு பணம் இல்லாமல் மிகுந்த பண நெருக்கடியில் இருந்துள்ளார் ரவுடி சரண்ராஜ். எனவே வழிபறி செய்வதில் கில்லாடியான இவர் வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.

வழிபறி செய்த பணத்தில், சூட்டோடு சூடாக பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார். அமர்க்களமாக நடந்த பிறந்தநாள் விழாவின்போது எடுத்த ஒரு வீடியோவை சரண்ராஜ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சரண்ராஜ் வீட்டுக்குள் இருந்து வெளி வந்து, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அரிவாளை எடுத்துக்கொண்டு, ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவின் பேக் கிரவுண்ட்டில் ‘தீம்’ மியூசிக்கும் இசைக்கப்படுகிறது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களின் சரண்ராஜ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் நேற்று சரண்ராஜை கைது செய்து வழக்கு பதிந்த சிறையில் அடைத்தனர்.

The post பிறந்த நாள் பார்ட்டி வைக்க வழிபறி: அரிவாளுடன் ‘கெத்து’ காட்டி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Trichy ,Kethu ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...