- திருச்சி
- திருச்சி மாநகராட்சி கவுன்சில்
- மேயர்
- அன்பழகன்
- கார்ப்பரேஷன் ஆணையர்
- சரவணன்
- மாநகராட்சி துணை கமிஷனர்
- பாலு
- நகர பொறியாளர்
- சிவபாதம்
- மண்டலம்
- ஜனாதிபதிகள்
- ஆண்டாள்
- ராம்குமார்
- துர்கா தேவி
- ஜெயா…
- தின மலர்
திருச்சி, டிச.31: திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள், ராம்குமார், துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற் பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, கடந்த காலங்களில் மழையின்போது, மாநகராட்சியில் 62,55,52,8,26, 24 ஆகிய வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில் 60, 58 ,42 ஆகிய வார்டுகளில் தண்ணீர் தேங்கியது. பின்னர் மோட்டார் மூலம் அந்த தண்ணீர் திருப்பி விடப்பட்டது. மாநகராட்சியில் 421 கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரிய காரணத்தினால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு இந்த பாதிப்புகளும் இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். காலி மனைகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க முட்புதர்கள் அகற்றப்பட்டு பள்ளங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு திருச்சி மாநகராட்சி பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் அப்போது மழையால் ஏற்படும் பாதிப்புகள் இருக்காது என்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
லீலா வேலு (திமுக): எனது வார்டுக்கு உட்பட்ட அன்னை நகர் பகுதியில் மழைநீர் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசகிள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
மேயர்: கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ஒவ்வொரு வார்டுக்கும் வரும் ஜனவரி மாதம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிக்கால் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். இனி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுரேஷ் (இ.கம்யூ): நல்ல கண்ணு நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, குறத்தெரு என்கிற ஜாதி பெயரில் உள்ள பஸ் நிறுத்தத்தை ஆர்.நல்லகண்ணு பஸ் நிறுத்தம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
பிரபாகரன் (விசிக): அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் சிலை இரும்பு கேட் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிவாணன் (கோட்டத் தலைவர்: மாநகராட்சியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் பொதுமக்களின் வாழ்வாதாரமாக மாடுகள் இருந்து வருகிறது. அந்த மாடுகள் மெயின் ரோட்டிற்கு வரும் பொழுது பிடிக்கலாம். ஆனால் கிராமத்திற்கு சென்று மாடுகளை பிடிப்பது சரியான முறை அல்ல. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
மேயர் அன்பழகன்: தெருக்களில் சுற்றி திரியும் போது தான் மாடுகளை பிடிப்பார்கள்.
முத்து செல்வம் (திமுக): மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை மாநகராட்சி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஜாமலை விஜய் (திமுக):எனது வார்டில் நீண்ட நாள் பிரச்சனையான பாதாள சாக்கடை திட்ட பணியை நிறைவேற்றி தர வேண்டும்.
மேயர் அன்பழகன் : தற்பொழுது உள்ள பாதாள சாக்கடை மூன்றாவது திட்டத்தில் உங்கள் வார்டு பகுதியை சேர்த்துள்ளோம் என்றார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post புதைவடிகால் பணி 2025ல் நிறைவுபெறும் appeared first on Dinakaran.