- அருப்புக்கோட்டை
- திருச்சி
- சிறுகமணி வேளாண் அறிவியல் நிறுவனம்
- திருச்சி மாவட்டம்
- திட்ட ஒருங்கிணைப்பாளர்
- ராஜா பாபு
- தமிழ்நாடு…
திருச்சி, டிச.31: அருப்புக்கோட்டை மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவிற்கு திருச்சி மாவட்ட விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்ட சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவிற்கு விவசாயிகளை அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வருகின்ற ஜன.4 மற்றும் 5 நாட்களில் “பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும்” என்ற தலைப்பில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வைக் கண்டு பயன்பெற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் திருச்சி மாவட்ட விவசாயிகளை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடைய விவசாய பெருமக்கள் தங்கள் வருகையை ஜன.3ம் தேதி மாலை 5 மணிக்குள் 0431-2962854, 9080540412, 8248485377, 9171717832 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது அல்லது 9171717832 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யவும்.
The post அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ள வேளாண் திருவிழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.