- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- யூனியன் அரசு
- திருமதி.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- இந்திய மாதம்
- டி. டி தமிழ் டிவி
- ஆளுநர்
சென்னை: ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் வலியுறுத்தியுள்ளார். சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் அவமதிப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரியை தவிர்த்துவிட்டு பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிடநல் திருநாடு என்ற வாசகம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் இழிவுபடுத்தி இருப்பதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்.
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? . தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்,
The post ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.