×

மைசூரில் உள்ள MUDA அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கர்நாடகா: மைசூரில் உள்ள MUDA அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் அலுவலகத்தில் இருந்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் முறைகேடாக நிலம் ஒதுக்கியது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி மற்றும் நிலத்தை விற்ற தேவராஜு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து லோக் ஆயுக்தா இந்த வழக்கை விசாரித்து வருகிறது!

The post மைசூரில் உள்ள MUDA அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : MUDA ,Mysore ,Karnataka ,MINISTER ,CHITARAMAYA ,MISAPPROPRIATION OF ,MYSURU MUNICIPAL DEVELOPMENT GROUP ,MUDA Office ,Dinakaran ,
× RELATED ஓசூர் ஜூஜூவாடியில் வைக்கோல் ஏற்றி...