×

கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்க எதிர்ப்பு


பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வரும் 13ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்காக பிரயாக்ராஜில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி சாதுக்களுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், ‘கும்பமேளா நடைபெறும்போது பிரயாக்ராஜில் டீக்கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பூக்கடைகள் வைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வர். கும்பமேளா அழகாகவும், சுத்தமாகவும், பிரமாண்டமாகவும், புனித தன்மையுடனும் அமைதியாக நடைபெற வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் புனிதத்தை காக்க இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்காமல் இருப்பது அவசியம்’ என்றார். கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் திரள்வதால், இது வேற்றுமையில் ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளது. இது சமூகத்தில் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வை அகற்றுகிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சமீபத்தில் கூறிய நிலையில், மஹந்த் ரவீந்திர புரி இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார். அகில பாரதிய அகார பரிஷத் அமைப்பின் திட்டத்துக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

The post கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Prayagraj ,Kumbamela ,Maha Kumbamela ,Uttar Pradesh ,Bharatiya Akara ,Parishad ,Mahant Ravindra Puri ,
× RELATED மகா கும்பமேளாவின் போது இலவச ரயில் பயணம் கிடையாது: நிர்வாகம் விளக்கம்