பாட்னா: பீகாரில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாளில் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட்டு, அதை அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது கட்டாயம். அதன்படி அவர்களது சொத்து மதிப்பு நேற்று முன்தினம் அரசு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் முதல்வர் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி என தெரியவந்துள்ளது.
அவரது கையில் ரூ.21,052 மற்றும் பல்வேறு வங்கிகளில் ரூ.60,811.56 உள்ளது. நிதிஷ் குமாரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.16,97,741.56 ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ.1.48 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு டெல்லி துவாரகாவில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. நிதிஷ் குமாரை விட அதிக சொத்து பல அமைச்சர்கள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
The post பீகார் முதல்வர் நிதிஷின் சொத்து மதிப்பு ரூ1.64 கோடி appeared first on Dinakaran.