×

உபரிநீரால் மக்கள் அவதி

தாரமங்கலம், அக். 18: தாரமங்கலத்தில் சுமார் 155 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி, கடந்த 2 வருடங்களாக காவிரி உபரிநீர் திட்டம் மூலம் நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் நீர் முழு கொள்ளளவை எட்டி வெளியேறும் போது, இரண்டு வாய்க்கால்கள் மூலம் வெளியேறி வந்தது. ஆனால், இந்த இரண்டு நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதால், ஏரி நிரம்பி வெளியேறும் மழைநீர், உபரிநீரானது அருகில் உள்ள குடியிருப்பு பகுதி, சாலையோரம் உள்ள கடைகளை சூழ்ந்து, பின்னர் மாநில நெடுஞ்சாலையில் செல்கிறது.இதுபோன்ற சமயங்களில் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். டூவீலர் மற்றும் கார்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை, நகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியின் உபரிநீர் செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உபரிநீரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Dharamangalam ,Daramangala ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி விவசாயி பலி