×

பேரிடர் மீட்பு குழுவினருக்கு பாராட்டு

மல்லசமுத்திரம், அக்.18: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுசிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாமாக முன்வந்து, பேரிடர் காலத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சமூக பணிகளை ஊக்குவிக்கும் வகையில் கொன்னையார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பி.டி.ஓ. லோகமணிகண்டன் முன்னிலை வகித்தார். பேரிடர் மீட்பு குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த், தினேஷ், வைரமுத்து, மாதவராஜ், கார்த்திக், சாமிதுரை, மனோகரன் மற்றும் ரவி உள்ளிட்ட இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் வார்டு உறுப்பினர்கள் சதாசிவம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பேரிடர் மீட்பு குழுவினருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Konnaiyar ,Elachipalayam ,Dinakaran ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்