×
Saravana Stores

வேளாண் பல்கலையில் மருத்துவ தாவரங்கள் நாற்றங்கால் பயிற்சி

 

கோவை, அக். 16: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கத்தில் மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள் துறையில் வரும் 18ம் தேதி \\”மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள்\\” குறித்த பயிற்சி நடக்கிறது. இதில், விவசாயிகள், பொதுமக்கள், அறிவியல் பட்டதாரிகள், நாற்றங்கால் உரிமையாளர்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் மகளிர் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் மருத்துவ தாவரங்கள் நாற்றங்கால் மற்றும் முக்கியமான அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவு மற்றும் திறன், தரமான நடவு பொருட்களுடன் தரமான மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும்.

புதிய தொழில் முனைவோருக்கு நல்ல வருமானம் தரக்கூடியது. இந்த ஒரு நாள் பயிற்சி வரும் 18-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பயிற்சி கட்டணம் ரூ.1,180 ஆகும். இதற்கு பதிவு செய்ய நாளை (17-ம் தேதி) கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 98429-31296 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post வேளாண் பல்கலையில் மருத்துவ தாவரங்கள் நாற்றங்கால் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Agricultural University ,Coimbatore ,Department of Medicinal and ,Crops ,Tamil Nadu Agricultural University ,Medicinal plants ,
× RELATED வேளாண் பல்கலை.யில் மலர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி