×

கலாம் பிறந்தநாள் விழா

குமாரபாளையம், அக்.15: குமாரபாளையம் அருகே கல்லங்காட்டு வலசில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். அப்துல் கலாம் படத்திற்கு பள்ளி குழந்தைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலாம் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பேச்சுபோட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் சீனிவாசன், பூபேஷ், அங்கப்பன், தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலாம் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Kalam ,Kumarapalayam ,President ,Abdul Kalam ,Kallangattu Valam ,Vidyal Prakash ,Kalam… ,
× RELATED 7 வயதில் துவங்கிய பயணம்…18 வயதில்...