திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனித்துணை கலெக்டர் கணேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் நிலம், சமூக பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 306 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்டவர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்திய பிரசாத், கோட்டாட்சியர் ஏ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, திருத்தணி சக்கரை ஆலை பொது மேலாளர் செல்வராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
The post குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 306 மனு appeared first on Dinakaran.