×

சில்லி பாய்ன்ட்…

* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீரர் யானிக் சின்னருடன் (இத்தாலி, செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் மோதுகிறார். அரையிறுதியில் சின்னர் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் தாமஸ் மகாச்சையும், ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸையும் வீழ்த்தினர்.
* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில், ஷார்ஜாவில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை 20 ஓவரில் 115/5; நியூசிலாந்து 17.3 ஓவரில் 118/2. ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறுவதில் ஆஸ்திரேலியா (6), இந்தியா (4), நியூசிலாந்து (4) இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் சவாலை சந்திக்கிறது (தொடக்கம்: இரவு 7.30). முன்னதாக, பிற்பகல் 3.30க்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து – ஸ்காட்லாந்து மோதுகின்றன (பி பிரிவு).

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Shanghai Masters tennis ,Yannick Sinner ,Italy ,Novak Djokovic ,Sinner ,Thomas ,Czech Republic ,Dinakaran ,
× RELATED களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை… படகு திருவிழாவில் பங்கேற்ற சாண்டாக்கள்!!