×

ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி முன்னாள் அதிபர் டிரம்ப் சபதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப், கூறியதாவது, ‘‘வெளிநாட்டு பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. சீனா 200 சதவீத வரி விதிக்கிறது. பிரேசில் மிகப்பெரிய வரிவிதிப்பு நாடு. எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கட்டண விதிப்பு நாடு இந்தியா தான். இந்தியாவுடன் அமெரிக்காவிற்கு சிறந்த உறவு உள்ளது. அதிலும் குறிப்பாக பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர். சிறந்த மனிதர், வரி விதிப்பை அவர் முக்கியமாக கொண்டுவந்துள்ளார். எனது திட்டத்தில் முக்கியமான ஒரு வார்த்தை. நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கும் பரஸ்பர வரியை அறிமுகம் செய்வேன்” என்றார்.

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் பிரசார வீடியோ: பிரபல இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார்.

The post ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி முன்னாள் அதிபர் டிரம்ப் சபதம் appeared first on Dinakaran.

Tags : Former ,President Trump ,India ,Washington ,Republican Party ,US presidential election ,China ,Brazil ,Ex- ,Dinakaran ,
× RELATED ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா...