×

மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு வங்கதேச முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஜூலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் ஹசீனா மீதான வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹசீனா உட்பட 45 பேரை கைது செய்து நவம்பர்18ம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது என்று அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் முகம்மது தாஜூல் இஸ்லாம் தெரிவித்தார்.

The post மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு வங்கதேச முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் appeared first on Dinakaran.

Tags : Dhaka ,Sheikh Hasina ,Bangladesh ,India ,International Criminal Court ,Dinakaran ,
× RELATED ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது வங்கதேச நீதிமன்றம்