×

ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா ஹாரீஸ் பிறக்கும் போதே அப்படித்தான்” : ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா ஹாரீஸ் பிறக்கும் போதே அப்படித்தான்” என முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடுமையான விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டார்; கமலா அப்படித்தான் பிறந்தார் என்று விமர்சித்துள்ளார்.மேலும், எல்லை பாதுகாப்பு விவகாரங்களில் பைடனின் நிர்வாகத்தன்மையை ட்ரம்ப் மிக கடுமையாக சாடியுள்ளார். ட்ரம்பின் பேச்சுக்கு, அவர் இருக்கும் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிசிடம் கோளாறு என எடுத்துக்கொள்ளக் கூடாது, அவர் கொள்கைகளில்தான் கோளாறு என குடியரசுக் கட்சித் தலைவர் லிண்ட்சே சமாளித்தது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா ஹாரீஸ் பிறக்கும் போதே அப்படித்தான்” : ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Joe Biden ,Kamala Harris ,Trump ,Washington ,Former ,President Trump ,United States ,Democratic Party ,
× RELATED முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...