×

‘அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன்’ குடியாத்தம் அருகே

குடியாத்தம், அக்.11: அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன்’ என சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று ஊராட்சி தலைவரின் கணவர் மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுப்பம் ஊராட்சியில் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான ரவிச்சந்திரனுக்கும், அந்த நபருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு அடிப்படை வசதி கேட்டவரின் வீட்டின் முன்பு அரிவாளுடன் சென்று, அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன் என தெலுங்கில் மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

The post ‘அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன்’ குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Panchayat ,Chettikuppam ,Kudiatham ,Vellore ,Dinakaran ,
× RELATED அணைக்கட்டு, குடியாத்தம் தாலுகா...