×

250 மூட்டை பருத்தி ₹5 லட்சத்திற்கு ஏலம்

மல்லசமுத்திரம், அக்.10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து, 250 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், அவினாசி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர். இதில் பி.டி. ரகம் ₹7109 முதல் ₹8010 வரையும், சுரபி ₹8060 முதல் ₹10,009 வரையும், கொட்டு பருத்தி ₹4210 முதல் ₹5,920 வரையும் ஏலம் போனது. மொத்தம் ₹5 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அதே போல், 15 மூட்டை நிலக்கடலை ₹20 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதில் ஈரப்பதம் உள்ளது ₹2450 வரையும், கொடி ஈரப்பதம் ₹1899 வரை விற்பனையானது. அடுத்த ஏலம் 16ம் தேதி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 250 மூட்டை பருத்தி ₹5 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Salem ,Erode ,Coimbatore ,Namakkal ,Avinasi ,
× RELATED ₹8.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம்