×

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு புதிய டீன் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு, அக்.9: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக டாக்டர் சிவசங்கர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த ராஜ கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். கடந்த 8 மாதங்களாக மருத்துவமனைக்கு பொறுப்பு டீனாக ஜோதிகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது நிரந்தர டீனாக சிவசங்கர் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக துறையின் இயக்குனராக இருந்தவர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகத்துறை தலைவராகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பவுஞ்சூர், செய்யூர், கயப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டீன் சிவசங்கர் கூறுகையில், பொதுமக்கள் நோயாளிகளுக்கு ஏதேனும் குறை இருந்தால் நேரடியாக புகாராக கொடுத்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post செங்கல்பட்டு மருத்துவமனைக்கு புதிய டீன் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Hospital ,Chengalpattu ,Dr. ,Sivashankar ,Chengalpattu Government Medical College Hospital ,Chengalpattu Government Medical… ,Dinakaran ,
× RELATED வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க...