×
Saravana Stores

திருத்தணி அருகே சாயி லட்சுமி கணபதிக்கு 108 பால்குட அபிஷேகம்

 

திருத்தணி, அக். 7: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொன்பாடி கிராமத்திற்கு அருகில் ஸ்ரீசாயி லட்சுமி கணபதி கோயில் கட்டப்பட்டு சமீபத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைதொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில், இறுதிநாளான நேற்று லட்சுமி கணபதிக்கு 108 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கிராம பெண்கள் பங்கேற்ற 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

மேள தாளங்கள் முழங்க பெண்கள் கோயில் வந்தடைந்து கணபதிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசத்தால், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருத்தணி சுற்று வட்டார கிராமமக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு லட்சுமி கணபதி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை என்.எஸ்.பாபு நாயுடு மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

The post திருத்தணி அருகே சாயி லட்சுமி கணபதிக்கு 108 பால்குட அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Abhishekam ,Sai ,Tiruthani ,Srisai Lakshmi Ganapati Temple ,Ponpadi village ,Thiruthani, Tiruvallur district ,Maha Kumbabhishek ,Mandalabishek ,Balkuta Abhishekam ,Sai Lakshmi ,
× RELATED நான் அழகா இல்லைன்னு ஃபீல் பண்ணினேன்: சாய் பல்லவி ஓபன் டாக்