×

நாகர்கோவிலில் பேரிடர் மீட்பு ஒத்திகை 1600 மாணவர்கள் பங்கேற்பு

நாகர்கோவில், அக்.5: பேரிடர் காலங்களில் செய்யப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தீயணைப்பு துறை சார்பில் பள்ளி கல்லூரிகளில் பேரிடர் மீட்பு ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி குமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவுப்படி நாகர்கோவில் கோணத்தில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் தீ விபத்துகளை எப்படி தடுப்பது, பேரிடர் காலங்களில் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது, பிறரை எப்படி மீட்பது என்பது பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. சுமார் 1600 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியை உதவி மாவட்ட அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஆஷிக் குமார் ஜோஷி, முதுநிலை ஆசிரியை பியூலா ஜாஸ்மின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் பேரிடர் மீட்பு ஒத்திகை 1600 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari District ,Fire Officer ,Satyakumar ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு பணம்...