- திருவள்ளுவர் வினாடி வினா போட்டி
- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- கலெக்டர்
- அழகுமீனா
- கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர்
- திருக்குறள் வினாடி வினா போட்டி
- விருதுநகர்…
நாகர்கோவில், டிச.19: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி 28.12.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அப்போட்டியில் கலந்து கொள்ளும் குழுக்களை மாவட்ட அளவில் தெரிவு செய்வதற்காக, மாவட்ட அளவிலான முதல்நிலை வினாடி வினாப் போட்டி 21.12.2024 (சனிக்கிழமை) அன்று மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற இருக்கிறது.
அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து நிலை அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள கூகுள் லிங்க் -ஐ பயன்படுத்தி 20ம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்திடல் வேண்டும். பதிவு செய்த பணியாளர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள இயலும். முகவரி: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdaYMUA42Na-bPMCFNl0jqHws 6N20lgnkAezt2bZ_pk2_10gA/viewform.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பெருவாரியான பணியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
The post நாகர்கோவிலில் திருவள்ளுவர் வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.