×
Saravana Stores

பள்ளி கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவிகள்: ஐ.நா.அமர்வில் சவுமியா அன்புமணி பேச்சு

சென்னை: ஐ.நா. மனித உரிமை பேரவையின் 57ம் அமர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடந்து வருகிறது. இதன் 37ம் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது: காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், மிகவும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய, அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகப் பிரச்னை.

காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் பள்ளிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் தங்களின் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் அளவுக்கு அதிகமான பாதிப்புகளுக்கு தீர்வு காண, அவர்களுக்கு கல்வி, சொத்துரிமை, வளங்களை கையாளும் உரிமை, உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் முடிவெடுக்கும் நடைமுறையில் பெண்களை ஈடுபடுத்துதல் போன்றவற்றின் மூலமாக அதிகாரமளிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post பள்ளி கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவிகள்: ஐ.நா.அமர்வில் சவுமியா அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Soumya Anbumani ,UN ,Chennai ,57th ,Human ,Rights Council ,Geneva, Switzerland ,president ,Green Homeland Organization ,
× RELATED வறுமையை ஒழிப்பதில் இந்தியா...