×
Saravana Stores

பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு

மதுரை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோரிக்கையை ஐகோர்ட் கிளை நிராகரித்தது. சிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். 4 வாரம் இன்னும் முழுமை அடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையை அக்.14ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரம் கையெழுத்திட வேண்டும் – என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியிருந்தது

The post பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bon Manikavel ,Madurai ,Statue Trafficking Prevention Unit ,Icourt ,Pon Manikavel ,CPI ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனை கட்டிடங்களின்...