×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில், கடந்த ஆகஸ்ட் மாதம் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி பயிற்சியாளரும், முன்னாள் நாதக நிர்வாகியுமான சிவராமன், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியைகள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சிவராமன், கைது நடவடிக்கைக்கு முன்பாக எலி மருந்து தின்ற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த நாதக பிரமுகர் ரவி(30) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சிவராமன் செய்த குற்ற செயல்களுக்கு இவர் உடந்தையாக இருந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Parkur, Krishnagiri district ,NCC ,Sivaraman ,
× RELATED லாரி மோதி பெண் பலி