×

கோவையில் தடை மீறி பேரணி அண்ணாமலை, வானதி கைது

கோவை: அல் உம்மா இயக்கத் தலைவரான பாஷா கடந்த 16ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து 17ம் தேதி உக்கடம் ரோஸ் அவென்யூ பகுதியில் இருந்து ஊர்வலமாக பாஷாவின் உடலை எடுத்து சென்று பூ மார்க்கெட் திப்புசுல்தான் பள்ளி வாசலில் அடக்கம் செய்தனர். ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி வழங்கியதை கண்டித்து போலீஸ் தடையை மீறி நேற்று காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கண்டன பேரணி செல்ல பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி மற்றும் விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அவர்களை காட்டூர் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

The post கோவையில் தடை மீறி பேரணி அண்ணாமலை, வானதி கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vanathi ,Al Ummah Movement ,Pasha ,Ukkadam Rose Avenue ,Tippusultan School ,Flower Market… ,Annamalai ,Dinakaran ,
× RELATED இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது,...