- கிருஷ்ணகிரி
- சின்னக்கட்டி
- சரோஜா
- ஆஞ்சிநாயனப்பள்ளி
- பர்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
- ஆஞ்சிநாயனமப்பள்ளி
- சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை
கிருஷ்ணகிரி, டிச.8: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னகட்டி மனைவி சரோஜா(49). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் சென்னை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயனப்பள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரி மோதி பெண் பலி appeared first on Dinakaran.