×

திருப்பூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

 

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே கோவில்வழியில் தெருநாய்கள் கருத்தடை மற்றும் பராமரிப்பு மையம் உள்ளது. தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு 3 முதல் 5 நாட்கள் பராமரிக்கப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே கொண்டு விடப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக முதற்கட்டமாக மாநகரில் 10 ஆயிரம் தெருநாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி சாந்தி தியேட்டர் பகுதியில் ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், கவுன்சிலர்கள் பத்மாவதி மற்றும் ராதாகிருஷ்ணன், மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Tirupur Corporation ,Tirupur ,Tirupur Municipal Corporation ,Kovilalai ,Dinakaran ,
× RELATED 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற...