×

வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்ற 2 வாலிபர்கள் கைது: 90 மாத்திரைகள் பறிமுதல்

 

திருப்பூர்,டிச.30: திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சாரதா நகர் முதல் வீதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த நவீன் (24), கஞ்சம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பதும் அவர்கள் அப்பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன், தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 90 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக வரும் வாகன ஓட்டிகளிடம் தங்கள் வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கின்றனர்.

The post வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்ற 2 வாலிபர்கள் கைது: 90 மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Velampalayam ,Saratha Nagar ,Dinakaran ,
× RELATED காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்: வீடியோ வைரல்