வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் அடுத்த மாதம் பொறுப்பு ஏற்க உள்ளார். தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராம் கிருஷ்ணனை அரசின் செயற்கை நுண்ணறிவு துறையின்(ஏஐ) ஆலோசகராக டிரம்ப் நியமித்தார். ராமை ஆலோசகராக நியமித்ததற்கு வலது சாரி அரசியல் செயற்பாட்டாளர் லாரா லூமர் கடுமையாக விமர்சித்தார்.
இது அமெரிக்காவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா மற்றும் பல நிறுவனங்களை உருவாக்கி அமெரிக்காவை வலுப்படுத்திய பல முக்கியமான நபர்களுடன் நான் அமெரிக்காவில் இருப்பதற்கு காரணம் எச்.1பி விசா. இந்த எச்1பி திட்டத்தை பாதுகாக்க நான் போருக்குச் செல்லக்கூட தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் கட்சிக்குள்ளே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எலான் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டிரம்ப் கூறுகையில், “மிகவும் திறமையான தொழில்நுட்ப ஊழியர்கள் நாட்டுக்குள் வர உதவும் எச்.1பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும் எச்1-பி விசாக்களை விரும்புகிறேன்.எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்.அதனால்தான் நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம்” என்றார்.
The post திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன்: டிரம்ப் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.