கூடுவாஞ்சேரி, செப்.30: கூடுவாஞ்சேரி அருகே கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியை முடித்த 150 மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பாண்டியன் டங்சூடு கராத்தே மற்றும் சிலம்பம் அகாடமி சார்பில் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் விழா கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையோரம் விஷ்ணு பிரியா நகரில் உள்ள கராத்தே அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், பாண்டியன் டங்சூடு கராத்தே மற்றும் சிலம்பம் அகாடமியின் நிறுவனரும், முதன்மை பயிற்சியாளருமான கராத்தே பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக துணை பொது செயலாளரும், மன்சூரியா குங்பூவின் தேசிய தலைவருமான மல்லை சி.இ.சத்யா, பிரபல தொழிலதிபர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி முடித்த 150 மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் மதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாரத் ராஜேந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்
The post கராத்தே, சிலம்பத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பெல்ட், சான்றிதழ் appeared first on Dinakaran.